வங்கதேச பொதுத்தேர்தல் முதல் உலககோப்பை- இந்தியா-நமீபியா பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப் 12)!

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 12) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* வங்கதேசத்தில் இன்று (பிப்ரவரி 12) நடக்கும், 300 இடங்களுக்கான பொதுத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிவுகள் மாலையே வெளியாக வாய்ப்பு; 2024ல் ஷேக் ஹசீனா பதவி விலகியதை தொடர்ந்து தேர்தல் நடைபெறுகிறது.

* புதுச்சேரி சட்டசபையில் இன்று காலை 9.30 மணியளவில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.

* நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்களை எதிர்த்து இன்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

* சென்னை கிண்டியில் நடைபெறும் செயலாக்க மாநாட்டில் ரூ.74,267 கோடி மதிப்பில் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவர் 71 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

3 போட்டிகள்

* டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (பிப்ரவரி 12) இந்தியா-நமீபியா பலப்பரீட்சை நடக்கிறது. டில்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

* காலை 11 மணிக்கு பல்லேகெலேவில் நடக்கும் போட்டியில் இலங்கை- ஓமன் அணிகள் மோதுகின்றன.

* மதியம் 3 மணிக்கு மும்பையில் நடக்கும் போட்டியில் இத்தாலி- நேபாளம் அணிகள் மோதுகின்றன.

* மாசி மாத வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு; முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு, வரும் 17ம் தேதி வரை தரிசனம் செய்யலாம்.

Source link