பாஜக பஞ்சாயத்து உறுப்பினர் கொலை வழக்கில் கர்நாடக காங். எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை

கடந்த ஆண்டு ஜூனில் வினய் குல்​கர்னி மீண்​டும் கைது செய்​யப்​பட்​டார். கடந்த 10 மாதங்​களாக சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், சிறப்பு நீதி​மன்ற நீதிபதி சந்​தோஷ் கஜனன் நேற்று இவ்​வழக்​கில் தீர்ப்​பளித்​தார்.

அதில், ‘‘பாஜக பஞ்​சா​யத்து உறுப்​பினர் யோகேஷ் கவு​டா​வின் அரசி​யல் வளர்ச்​சியை பிடிக்​காமல் காங்​கிரஸ் எம்​எல்ஏ வினய் குல்​கர்னி கூலிப்​படை மூலம் அவரை கொலை செய்​தது தக்க ஆதா​ரங்​களு​டன் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. வினய் குல்​கர்​னிக்கு ஆயுள் தண்​டனை​யும் ரூ.16 லட்​சம் அபராத​மும் விதிக்​கப்​படு​கிறது. இந்த ரூ.16 லட்​சம் கொல்​லப்​பட்ட யோகேஷ் கவு​டா​வின் பிள்​ளை​களுக்கு வழங்க உத்​தர​விடப்​படு​கிறது. இந்த வழக்கில் விக்​ரம் பெல்​லாரி, சந்​தீப் சவுடத்தி உள்​ளிட்ட 16 பேருக்கும் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​படு​கிறது” என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து வினய் குல்​கர்​னி​யின் எம்​எல்ஏ பதவி பறி போய் உள்​ளது. குற்​ற​வாளி​களாக அறிவிக்​கப்​பட்ட 17 பேரும் பரப்​பன அக்​ரஹா​ரா மத்​தி​ய சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

Source link