குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி – போலீஸார் தீவிர விசாரணை

குடியாத்தத்தில், 14 வயது சிறுமி பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் வன்முறை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு பெற்றோரைப் பார்ப்பதற்காக சிறுமி திருவண்ணாமலைக்குச் சென்றபோது, அவருக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, உடல்நலனும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சிறார் வதை
சிறார் வதை
சித்திரிப்புப் படம்

இதையடுத்து, பெற்றோர் சிறுமியை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். சிறுமி பாலியல் வன்முறைக்குள்ளாகியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இதுபற்றி, மருத்துவர்கள் கொடுத்த தகவலின்பேரில், திருவண்ணாமலை போலீஸாருடன் இணைந்து குடியாத்தம் போலீஸாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Source link