சென்னையில் நடந்த போட்டியில் மேட்ச் பிக்சிங்: அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் கனடா கிரிக் கெட் அமைப்பில் நடந்துள்ள பல்வேறு ஊழல், உயர்மட்ட நிர்வாகிகள் அணித் தேர்வில் செய்த முறைகேடுகள், ஆட்டத்தின் முடிவை மாற்ற நடந்த முயற்சிகள் (மேட்ச் பிக்சிங் சூதாட்டம்), இப்படி பல்வேறு விஷயங் கள் ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.

கனடாவில் பிரபல புலனாய்வு நிகழ்ச்சியான ‘தி பிப்த் எஸ்டேட்’ நிகழ்ச்சி யில் ஊழல், குற்றம் மற்றும் கிரிக்கெட் என்ற பெயரில் 43 நிமிடங்கள் ஓடும் ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விஷயங் கள் ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.

குறிப்பிட்ட வீரர்களை அணி யில் வலுக்கட்டாயமாக சேர்க்க நெருக்கடி கொடுக்கப்பட்டதாக முன்னாள் பயிற்சியாளர்கள் குர்ரம் சோகன், தசநாயக்கே குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த ஆவணப்படத்தில் சமீபத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கனடா அணி விளையாடிய சில போட்டிகளில் சந்தேகத்துக் குரிய வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சி லின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கடந்த பிப்ரவரி 17-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் கனடா- நியூசிலாந்து அணிகள் லீக்கில் மோதின. இதில் கனடா நிர்ணயித்த 174 ரன் இலக்கை நியூசிலாந்து அணி 15.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசிய கனடா பவுலர்கள் முதல் 4 ஓவருக் குள் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றினர். அதன் பிறகு ரன்களை வாரி வழங்கி விட்டனர். அந்த ஆட்டத்தில் 5-வது ஓவரை கனடா கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான 22 வயதான தில்பிரீத் பஜ்வா வீசினார். அந்த ஓவரில் ஒரு நோ-பால், லெக்சைடில் வைடு உள் பட 15 ரன்களை வழங்கினார். இதில் நோ-பால், வைடுகளை திட்டமிட்டு வீசினாரா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. அவர் இந்த போட்டிக்கு 3 வாரங்களுக்கு முன்பு தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனால் சந் தேகம் வலுத்துள்ளது. அதனால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால், அது குறித்து இப்போது விரிவான தகவல்களை வெளியிட முடியாது என ஐ.சி.சி. அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Source link