தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் இதழில் வெளியாகியிருக்கிறது.
விருதாச்சலம்
விருதாச்சலம் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வும், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வும் மோதும் தொகுதி. தே.மு.தி.க சார்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும், பா.ம.க சார்பில் டாக்டர் தமிழரசியும் களம் காண்கிறார்கள். நா.த.க–வில் ஆனந்தி, த.வெ.க–வில் விஜய் போட்டியிடுகின்றனர்.

உள்ளூர் மருத்துவராகத் தொகுதி மக்களுக்குப் பரிச்சயமானவர் என்பது தமிழரசிக்கு பலம். அதேபோல விஜயகாந்த் முதலில் வெற்றிபெற்ற தொகுதி என்பதும், தே.மு.தி.க இரண்டு முறை தக்கவைத்த தொகுதி என்பதும் பிரேமலதாவுக்கு ப்ளஸ். தி.மு.க-வின் கூட்டணி பலத்தாலும், அதிரடி பிரசாரத்தாலும் பிரேமலதா முந்துகிறார்.
இவர்கள் தவிர, கடலூர் – மயிலாடுதுறை – நாகப்பட்டினம் – திருவாரூர்- தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி, நாகப்பட்டினம் தொகுதியில் ஜவாஹிருல்லா, வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன், மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி ராஜா, முகமது முபாரக், க.அன்பழகன், ஷாஜகான், துரை.சந்திரசேகர், வைத்திலிங்கம், சி.வி.சேகர் உள்ளிட்ட பல முக்கிய முகங்கள் போட்டியிடுகின்றன. இந்தத் தொகுதிகளின் முழு கள நிலவரம் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்!
