சென்னை,
தூத்துக்குடியில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06018), வருகிற ஏப்ரல் 22ம் மற்றும் 27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) தூத்துக்குடியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06017) வருகிற ஏப்ரல் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
