விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்
இந்நிலையில் தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட பத்து தொகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த சில நாட்களாகவே தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அதோடு திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் செய்த பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இப்படியான நிலையில் விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்துக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் கனிமொழி.
கனிமொழி எம்பி தீவிரமான பரப்புரை
அப்போது பிரேமலதா விஜயகாந்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், இபிஎஸ் குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டை பற்றி எதிரணியில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு கவலை கிடையாது. அவருக்கு தன்னை காப்பாற்றி கொண்டால் போதும். மக்களை பற்றியும், தமிழ்நாடு குறித்து அவருக்கு கவலை கிடையாது. தான் நல்லாயிருக்கனும். நல்ல இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அடிமையாகவே இருக்க தயாராகி விட்டவர் தான் எடப்பாடி.
எடப்பாடி பழனிசாமி கவர்னர் வேலைக்கு போகலாம்
இந்த தேர்தலுக்கு பிறகு எங்காவது கவர்னர் வேலைக்கு வேணா போகலாம் என்றார். அவர் சொன்னதை கேட்டு அருகிலிருந்த பிரேமலதா விஜயகாந்தை சிரித்தார். தொடர்ந்து கனிமொழி பேசுகையில், இபிஎஸ்ஸுக்க்கு தமிழ்நாட்டில் இடமில்லை. கவர்னர் வேலை பெரிய கஷ்டம் கிடையாது. நம்ம ஊர்லயும் ஒரு கவர்னர் இருந்தார். சட்டமன்றத்துக்கு வருவார். திரும்பி போவார் அவ்வளவு தான். கவர்னர் வேலையே வேண்டாம் என்பதை தான் திமுக பல காலமாக கூறி வருவதாக பேசியுள்ளார் கனிமொழி.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம்
திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவர் தன்னுடைய பிரச்சாரங்களில் தேர்தலுக்கு பின்பாக எடப்பாடி பழனிசாமியை ஏதாவது ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக பாஜக அனுப்பி விடும் என தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கிறார். அதோடு இபிஎஸ் இப்போதே தனக்கு பிடித்தமான மாநிலத்தை அமித்ஷாவிடம் சொல்லி வைக்கலாம்.
இபிஎஸ் கொடுத்த பதிலடியால் சர்ச்சை
அங்கு அவரை தேர்தலுக்கு பின்பாக கவர்னராக அனுப்பி விடுவார்கள் என பேசி வருகிறார். இதனிடையில் எடப்பாடி பழனிசாமி, கனிமொழியின் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அவர் ஒரு செல்லாத காசு என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தோல்வி பயத்தால் அவர் இவ்வாறு பேசுவதாக விமர்சித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தேர்தலுக்கு பின்பாக இபிஎஸ்ஸை கவர்னராக அனுப்பி விடுவார்கள் என கனிமொழி விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
