Mrunal Thakur: `பிப்.14 ஆம் தேதி எனக்கு திருமணமா?' – மிருணாள் தாகூர் விளக்கம்

‘India Today’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் மிருணாள் தாகூர், திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.

மிருணாள் தாகூர்

நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் “India Today’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் மிருணாள் தாகூர் திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.

“யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியைக் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை.

மிருணாள் தாகூர் - தனுஷ்
மிருணாள் தாகூர் – தனுஷ்

ஆனால் பிப்ரவரி 14 ஆம் தேதி அவர்களுக்கு முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ஆம் தேதியாக மாறப்போகிறது.

சிலர் அவர்களாகவே எதையாவது பதிவிட்டு மிருணாள் தாகூர் இதை சொன்னார் என சொல்கிறார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன.

சரியான நேரத்தில் சரியான நபரை சந்திக்கும்போது திருமணம் செய்துகொள்ளலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link