கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நர்ஸ் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நர்ஸ் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் இரு நர்ஸ்களுக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்று பரவும் அபாயம் தென்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ஆண் குணமடைந்து கடந்த மாதம் வீடு திரும்பினார். ஆனால், பெண் நர்ஸின் நிலைமை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில், நிபா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 25 வயது பெண் நர்ஸ் இன்று உயிரிழந்தார். மேற்கு வங்கத்தில் நிபா வைரஸால் ஏற்படும் முதல் மரணம் இதுவாகும். இதையடுத்து, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இந்த நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள் தங்களது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன.

Source link