க டந்த 18 மாதங்களில் இந்திய முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 1.14 லட்சம் கோடி ரூபாயை ‘ஆல்டர்னேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் பண்டு’களில் முதலீடு செய்துள்ளதாக ‘ஓய்ஸ்டெர் குளோபல் அண்டு கிரிசில்’ நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த செப்டம்பர் 2025 நிலவரப்படி, ஆல்டர்னேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் பண்டுகளில் மொத்த முதலீடு 15.05 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இதில், உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்கு 50.30 சதவீதத்தில் இருந்து 55.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, அன்னிய முதலீட்டாளர்களை சார்ந்திருப்பது குறைந்துள்ளது.
பெரும்பாலான ஈக்விட்டி ஆல்டர்னேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் பண்டுகள், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கத் துவங்கியுள்ளன. இதில், சிறப்பாக செயல்பட்ட பண்டுகள், முதலீட்டு தொகையை போல 2 மடங்குக்கும் மேல் லாபத்தை தந்துள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
