– நமது நிருபர் -: பாலக்காடு அருகே, 40 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம்,

– நமது நிருபர் -:

பாலக்காடு அருகே, 40 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை எஸ்.ஐ., ஷிஜுவின் தலைமையில், நேற்றுமுன்தினம் காலை, 7:00 மணிக்கு, நடுப்புணி சோதனைச்சாவடி அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். பைக் டேங்கினுள் சிறப்பு அறை அமைத்து, அதில் எவ்வித ஆவணமும் இன்றி, 40 லட்சம் ரூபாயை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

விசாரணையில், அவர், மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி பகுதியைச் சேர்ந்த விஷால்குமார், 30, என்பதும், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பணத்தை கொண்டு செல்வதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவரை, பறிமுதல் செய்த பணத்துடன் தொடர் விசாரணைக்காக வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Source link