சீனாவுடன் அமெரிக்காவுக்கு நல்ல உறவு; அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: ‘‘சீனா உடனான எங்கள் உறவு இப்போது நன்றாக உள்ளது. சீன அதிபருக்கும், எனக்கும் இடையே நல்ல உறவு இருப்பது முக்கியம்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈராானுடன் நாம் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் அது ஈரானுக்கு மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும். அவர்கள் ஒப்பந்தம் செய்யாமல் பிடிவாதம் பிடித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் நேற்று மிகச் சிறந்த சந்திப்பை நடத்தினேன்.

நான் ஏப்ரல் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க போகிறேன். அவர் இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்கா வருகிறார். நான் அதை எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். சீனா உடனான எங்கள் உறவு இப்போது நன்றாக உள்ளது. அவருக்கும், எனக்கும் இடையே நல்ல உறவு இருப்பது முக்கியம். உலகின் மிக சக்திவாய்ந்த இரண்டு நாடுகளுக்கு இடையே மிகச்சிறந்த உறவு உள்ளது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

எண்ணெய் வளம்

இது குறித்து அதிபர் டிரம்ப் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வெனிசுலாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் அசாதாரணமானவை. நாங்கள் வெனிசுலா டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் அவரது பிரதிநிதிகளுடன் மிகச் சிறப்பாக உறவை கொண்டுள்ளோம். எண்ணெய் வளம் வளர்ச்சியை கண்டு வருகிறது. மேலும் பல ஆண்டுகளாகக் காணப்படாத பெரிய அளவிலான பணம் விரைவில் வெனிசுலா மக்களுக்கு பெரிதும் உதவும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Source link