புதுடில்லி : கடந்த 2016 ம் ஆண்டு முதல் 2025 வரை பணியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக 8, 639 புகார்கள் வந்துள்ளதாக மத்திய

புதுடில்லி : கடந்த 2016 ம் ஆண்டு முதல் 2025 வரை பணியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக 8, 639 புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக லோக்சபாவில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: கடந்த 2016 முதல் 2025 வரை பணியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக 8,639 புகார்கள் வந்துள்ளன. இதில் அதிகபட்சமாக 2024 ம் ஆண்டு, 1,170 புகார்களை தலைமை நீதிபதி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை நீதித்துறை கையாண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நீதிமன்ற நடவடிக்கைகளின்படி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு எதிரான புகாரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் தான் வழங்க முடியும். அதேபோல், ஐகோர்ட் நீதிபதிகளுக்கு எதிரான புகாரை சம்பந்தப்பட்ட ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வழங்கலாம்.

Source link