சென்னை: பனையூர் பண்ணையாரே, இந்த முதல் நாள் முதல் காட்சி சினிமா டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா என்று நடிகரும், தவெக தலைவருமான விஜயை, அதிமுக கடுமையாக விமர்சித்து உள்ளது.
இதுகுறித்து அதிமுக தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவு;
நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle? அப்பாவால சினிமா உள்ள வந்தீங்க. வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சி கலைஞர் விஜயகாந்த் ஆகியோரை பார்த்து காப்பி பேஸ்ட் அரசியலில் அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் பங்களிப்புகளை திருடி காப்பி பேஸ்ட். இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?
யாரோ எழுதிக் கொடுத்ததை, ஆக்ஷன் என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய். சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா?
கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பது போல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், ‘அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்’ என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது.
உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்? எங்கள் ஈவெரா பெயரில், அண்ணாதுரை பெயரில், எம்ஜிஆர் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம்.
ஜெயலலிதாவின் ஆட்சி அமைய அணிலாய்’ இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின் போது, 41 பேர் மரித்த போது பேசக்கூடாது என்ற அரசியல் பண்போடு தான் இபிஎஸ் நாகரிகத்தோடு நடந்துகொண்டார். அப்புறம் பனையூர் பண்ணையாரே. இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே? கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க அங்கிள்.
இவ்வாறு அதிமுக விமர்சித்துள்ளது.
