ஒவ்வொரு கோவிலின் புனிதத்தை காப்போம்: சந்திரபாபு நாயுடு உறுதி

அமராவதி: ஒவ்வொரு கோவிலின் புனிதத்தையும் என் அரசு காப்பாற்றும் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது: திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்படம் செய்த விவகாரத்தை மறைப்பது, பக்தர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் செயல். புனிதப்பொருளான லட்டுவில் கலப்படம் இருப்பதற்கான ஆய்வு முடிவுகளை ஏன் வெளியிடவில்லை என மக்கள் கேள்வி எழுப்புவர்.

ஒவ்வொரு கோவிலின் புனிதத்தையும் என் அரசு காப்பாற்றும். அரசியல் என்ற போர்வையில் செய்யப்படும் குற்றங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வு இருக்காது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

Source link