புதுடில்லி: வெனிசுலாவிடமிருந்து நேரடியாக கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, இந்தியாவின், 'ரிலையன்ஸ்

புதுடில்லி: வெனிசுலாவிடமிருந்து நேரடியாக கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, இந்தியாவின், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்துக்கு, அமெரிக்கா ‘பொது உரிமம்’ வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீப காலம்வரை, வெனிசுலா எண்ணெய் நிறுவனங்களின்மீது, அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகள் விதித்திருந்தது.

கடந்த மாதம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்த பின், அந்நாட்டின் எரிசக்தி துறை மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்திஉள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தற்போது இந்த அனுமதி கிடைத்துள்ளது. உரிமம் வழங்கக் கோரி ரிலையன்ஸ் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, ரிலையன்ஸ் இம்மாத துவக்கத்தில், 20 லட்சம் பீப்பாய் வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. இதை நேரடியாக வாங்காமல், இடைத்தரகு நிறுவனங்கள் வாயிலாக வாங்கியது.

இந்த அனுமதிக்கு பின், ரஷ்ய கச்சா எண்ணெயை நம்பியிருப்பதை குறைத்து, வெனிசுலாவிலிருந்து, மலிவு விலையில் கச்சா எண்ணெயை ரிலையன்ஸ் இறக்குமதி செய்யும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே, இந்தியா மீதான 25 சதவீத கூடுதல் வரியை அதிபர் டிரம்ப் நீக்கியுள்ள நிலையில், தற்போது இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link