'எனக்கு எல்லாம் கொடுத்தது இந்த சின்னசாமி மைதானம்தான்!' – டிராவிட் நெகிழ்ச்சி

“இந்த இடம் சில சமயங்களில் எனக்கு மகிழ்ச்சியையும், சில சமயங்களில் ஏமாற்றங்களையும் தந்திருக்கிறது, ஆனால்.!”- டிராவிட் நெகிழ்ச்சி

ராகுல் டிராவிட்

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தின் ஒரு ஸ்டாண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து பேசியிருக்கும் ராகுல் டிராவிட், “சின்னசாமி மைதானம் என்னுடைய இரண்டாவது வீடு போன்றது.

நானும் அனில் கும்ப்ளேவும் எங்கள் வீடுகளில் அதிக நேரத்தை செலவிட்டதை விட இந்த மைதானத்தில் தான் அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறோம்.

பெங்களூரு சின்னசாமி மைதானம்
பெங்களூரு சின்னசாமி மைதானம்

இந்த இடம் சில சமயங்களில் எனக்கு மகிழ்ச்சியையும், சில சமயங்களில் ஏமாற்றங்களையும் தந்திருக்கிறது.

ஆனால் இன்றைக்கு நான் எட்டியிருக்கும் இடத்திற்கு தேவையான அனைத்தையும் எனக்கு வழங்கிய இடம் இதுதான்.

என் வாழ்க்கையில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் இந்த மைதானத்திற்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

Source link