ஸ்பெயின் நிறுவனத்தை வசமாக்கும் 'இக்ஸிகோ'

புதுடில்லி :பயண சேவை நிறுவனமான இக்ஸிகோ, ஸ்பெயினின் இரண்டாவது மிகப்பெரிய ரயில் முன்பதிவு தளமான, ‘ட்ரெனஸ்’ எனப்படும் ஆன்லைன் டிராவல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை வாங்குவதன் வாயிலாக, அந்த நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளது.

அந்த பங்குகளை, கிட்டத்தட்ட 125 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இது, இக்ஸிகோவின் முதல் முக்கிய வெளிநாட்டு கையகப்படுத்தல். இதன் வாயிலாக, இக்ஸிகோ, ஐரோப்பாவில் முதல் முறையாக களமிறங்குகிறது.

இது தவிர, ஸ்பெயினின் ஸ்குவாட் ஏஸ் சர்வீஸ் நிறுவனத்தில், 45.02 சதவீத பங்குகளை கிட்டத்தட்ட 4.83 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கும் இக்ஸிகோ இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Source link