சென்னை: டபிள்யு.டி.டி., ஸ்டார் கன்டெண்டர் டேபிள் டென்னிஸ் பைனலுக்கு இந்தியாவின் ஹர்மீத், யாஷஸ்வினி ஜோடி முன்னேறியது.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் ‘ஸ்டார் கன்டெண்டர்’ தொடர் நடத்தப்படுகிறது. கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், யாஷஸ்வினி ஜோடி, இந்தியாவின் பயாஸ், சிண்ட்ரெல்லா ஜோடியை சந்தித்தது. இதில் ஹர்மீத், யாஷஸ்வினி ஜோடி, 3-0 என (11-9, 11-6, 11-9) கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
ஆண்கள் ஒற்றையர் ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் சத்யன், 3-2 என்ற (9-11, 11-3, 10-12, 11-7, 11-5) கணக்கில் ருமேனியாவின் எடுவார்டுவை வென்றார். அடுத்து நடந்த காலிறுதியில் சத்யன், செக் குடியரசின் லுபோமிரிடம் 0-3 என (6-11, 8-11, 11-13) என அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
