மீனவர் பிரச்னை மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: ‘இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, நேற்று அவர் எழுதிய கடிதம்:

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட, 12 தமிழக மீனவர்களில் ஒன்பது பேர், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால், மூன்று மீனவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை, தலா 11.60 லட்சம் இலங்கை ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அபராதத்தை செலுத்தா விட்டால், கூடுதலாக மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

விடுவிக்கப்பட்ட ஒன்பது மீனவர்களும், தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத் தில் தாங்கள் தலையிட்டு, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link