"திமுக-வுக்கு அது வெற்றியைத் தரும் என்று நம்புவது மூடநம்பிக்கை" – பிரவீன் சக்கரவர்த்தி சொல்வது என்ன?

சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லாதது எனவும் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்திருந்தார்.

பிரவீன் சக்கரவர்த்தி

தேர்தல் நெருங்கி வருவதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கூட்டணி குறித்து பரபரப்பான கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள்.

சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லாதது எனவும் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்திருந்தார்.

 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர்.

இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூட்டணி தொடர்பாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகவும் பேசியிருந்தார்.

திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, “இனி யாரும் கூட்டணி ஆட்சி குறித்து பேசமாட்டார்கள். உரிமைத் தொகை ரூ.5000 கொடுத்த பிறகு மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியும்.

அதனால், இனி யாரும் அது பற்றி பேசமாட்டார்கள். எங்களுடைய தலைவர் தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

காங்கிரஸில் இருந்து ராகுல் காந்தி, கார்கே, செல்வப் பெருந்தகை கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம்” எனப் பேட்டியளித்திருந்தார்.

இந்தப் பேட்டியை ரீட்வீட் செய்து காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் பிரவீன் சக்ரவர்த்தி, “மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது.

ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூட நம்பிக்கை.

கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன. 5 தோல்வியடைந்தன” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டு வருகிறார்.

Source link