ரூர்கேலா: புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 2-4 என, அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசனில், 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடந்த போட்டியில் இந்திய அணி, பெல்ஜியம், அர்ஜென்டினாவுடன் தலா 2 போட்டியில் விளையாடியது.
முதலிரண்டு போட்டியில் பெல்ஜியம் (1-3), அர்ஜென்டினாவிடம் (0-8) தோற்ற இந்தியா, 3வது போட்டியில் பெல்ஜியத்திடம் (2-4) வீழ்ந்தது. நான்காவது போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மீண்டும் மோதின. இதில் இந்திய அணி 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு ஆதித்யா அர்ஜுன் (49வது நிமிடம்), சஞ்சய் (58வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். நான்கு போட்டியிலும் தோல்வியடைந்த இந்தியா, 8வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் பெல்ஜியம் (22 புள்ளி), அர்ஜென்டினா (17) உள்ளன.
