பெங்களூரு: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் பெங்களூரு அணி 2-0 என, டில்லியை வீழ்த்தியது
அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) 12வது சீசன் நடக்கிறது. மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் சிவசக்தி நாராயணன் (45+1வது நிமிடம்), கேப்டன் சுனில் செத்ரி (90+4வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
ஜாம்ஷெட்பூர் வெற்றி
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர், முகமதன் அணிகள் மோதின. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மதிஹ் தலால் ஒரு கோல் அடித்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய முகமதன் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
