தமிழக இடைக்கால பட்ஜெட் முதல் வங்கதேச புதிய அரசு பொறுப்பேற்பு வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 17)!

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 17) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று சட்டசபையில்நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரை நிகழ்த்தவுள்ளார்.

* வேளாண் துறைக்கான இடைக்கால பட்ஜெட்டை, அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

* சட்டசபையில் வளாகத்தில் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

* வங்கதேச தேர்தலில் பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று மாலை 4 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் சபாநாயகர் ஓம்பிர்லா பதவியேற்கிறார்.

* பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானுடன் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று அதிகாலை மும்பை வந்தடைந்தார். அவர் மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்துகிறார். அப்போது கூடுதல் ரபேல் போர் விமானங்கள் வாங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.

* தமிழகத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் மக்களை சந்திக்கும் தெருமுனை பிரசார பொதுக்கூட்டத்தை இன்று முதல் பிப்வரி 28ம் தேதி வரை பாஜவினர் நடத்த உள்ளனர்.

இன்றைய போட்டிகள்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெற்றன.

* சென்னையில் காலை 11 மணிக்கு நடக்கும் போட்டியில் கனடா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

* இலங்கை பல்லேகெலேவில் பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் போட்டியில் அயர்லாந்து-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

* மும்பையில் இரவு 7 மணிக்கு நடந்த போட்டியில் நேபாளம்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.

Source link