அமெரிக்காவில் ஹாக்கி விளையாட்டின் போது துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹாக்கி விளையாட்டின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் ரோட் தீவு மாநிலத்தில் இளைஞர்கள் ஹாக்கி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் சந்தேக நபர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் காயமடைந்த 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குடும்ப தகராறு காரணமாக நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். முதலில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட போது அணிகள் தொடர்ந்து விளையாடத் தொடங்கின.

ஆனால் துப்பாக்கிச் சூடு தொடர்ந்ததால், வீரர்கள் மைதானத்தின் ஓரங்களுக்கு ஓடிவிட்டனர். அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link