உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் 'பிப்ரவரியில் மழை' – சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை மையம்: தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை – எந்தெந்த மாவட்டங்களில்? விவரங்கள் இதோ!

மழை

பொதுவாகப் பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாட்டில் மழை பெய்வது அரிதிலும் அரிது. இந்த அரிய நிகழ்வு இந்த ஆண்டு நடக்கும் போல.

ஆம்… சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது

அதில் கூறியுள்ளதாவது…

“பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மழை வானம்
மழை வானம்

இதன் காரணமாக, நேற்று (16-02-2026) காலை 8.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகியுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் 18 ஆம் தேதி வாக்கில் மேலும் வலுப்பெறக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.

2002-ம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் இப்படியொரு தாழ்வுப் பகுதி உருவாகுவது இதுவே முதல் முறை.

சென்னை வானிலை மையத்தின் அறிக்கைப் படி, வரும் 20-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் குறைந்தபட்ச வெப்ப நிலை இருக்கக்கூடும்.

வரும் 21-ம் தேதி, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

வரும் 22-ம் தேதி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

Source link