நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் – கணவன் சிக்கியது எப்படி?

மனைவி மீது சந்தேகப்பட்டு காதலர் தின விருந்து முடிந்தவுடன் இரவில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.

அன்சுல், மஹக்

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அவருக்கும் அன்சுல் என்பவருக்கு கடந்த ஓர் ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இருவரும் காதலர் தினத்தன்று இரவு விருந்தை வீட்டில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில்தான் மஹக் படுகொலை செய்யப்பட்டார். அன்சுல் இரவு 11 மணிக்கு போலீஸாருக்கு போன் செய்து, மர்ம நபர்கள் திருடுவதற்காக வந்ததாகவும், அவர்கள் மஹக்கை கழுத்தை அறுத்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அன்சுல் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் கொடுத்தார். அவர் சொல்வது நம்பும்படியாக இல்லை. அவரால் கொலையாளி குறித்து சரியாக தகவல் கொடுக்க முடியவில்லை.

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர்தான் இக்கொலையை செய்திருந்தார் என்பது தெரியவந்தது. பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்த மஹக் மீது திருமணமான நாளில் இருந்து அன்சுல் சந்தேகப்பட்டு வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பத்தன்று காதலர் தின விருந்தில் இருவரும் இருந்தபோது இதே பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபத்தில் அன்சுல் தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொலைசெய்துள்ளார். அதன் பிறகு இதனை கொள்ளை முயற்சி போன்று சித்திரிப்பதற்காக கழுத்தையும் அறுத்துள்ளார். அவரைக் கைதுசெய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். மஹக் தந்தை கிருஷ்ணா ஆரம்பத்தில் இருந்தே அன்சுல்தான் இக்கொலையை செய்திருக்கவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார். அது உண்மையாகி இருக்கிறது. இருவருக்கும் கடந்த செப்டம்பரில்தான் திருமணம் நடந்தது.

Source link