கோழிக்கோடு; கேரளாவில் பிரபல ஜவுளிக்கடை தீப்பிடித்து எரிந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து

கோழிக்கோடு; கேரளாவில் பிரபல ஜவுளிக்கடை தீப்பிடித்து எரிந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓடினர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

கோழிக்கோடு அருகே பாளையம் என்ற பகுதியில் பிரபல ஜவுளிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. கடையில் ஏராளமானோர் குவிந்து, ஆடைகளை வாங்கிக் கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஜவுளிக்கடையின் முதல் தளத்தில் தீப்பிடித்தது. மளமளவென இந்த தீ அடுத்த தளத்துக்கு பரவியது. கடை தீப்பிடித்து எரிவதை கண்ட வாடிக்கையாளர்கள் ஒரு கணம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

பின்னர் உயிர்தப்பிக்க வேண்டிய அங்கும், இங்கும் ஓடினர். இதனால் அங்கு ஒருவித பதற்றமான சூழல் காணப்பட்டது.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், உள்ளூர் போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

தீப்பிடித்த போது வாடிக்கையாளர்களை உடனடியாக எச்சரித்து வெளியே அனுப்பியதால் பெரும் அசம்பாவிதம் தகர்க்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் மின்கசிவு காரணமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது என்று போலீசார் கூறினர்.

Source link