செய்திகளை பொறுத்து ஏற்றம் தொடரலாம்

குறியீடு நிப்டி ஆரம்பம் 25,637.95

அதிகம் 25,764.40

குறைவு 25,570.30

நிறைவு 25,725.40

பதினோரு மணிவரை சிறு சிறு ஏற்ற இறக்கங்களை கண்ட நிப்டி, அதன் பின் சிறிதுசிறிதாக ஏற்றம் கண்டு, இரண்டு மணியளவில் சிறிது தடுமாறி, நாளின் இறுதியில் 42 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி மைக்ரோகேப் 250’ குறியீடு அதிகபட்சமாக 0.99 சதவிகித ஏற்றத்துடனும்; ‘நிப்டி மிட்கேப் 50’ குறியீடு குறைந்த பட்சமாக 0.14 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 14 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும்; 4 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி பி.எஸ்.யு., பேங்க்’ குறியீடு அதிகபட்சமாக 2.11 சதவிகித ஏற்றத்துடனும்; ‘நிப்டி மெட்டல்’ குறியீடு அதிகபட்சமாக 1.06 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,250 பங்குகளில், 1,929 ஏற்றத்துடனும்; 1,216 இறக்கத்துடனும்; 105 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 100 நாள் மற்றும் 200 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே வர்த்தகமாகி வருகிறது. ஆர்.எஸ்.ஐ., 50-க்கு சற்று மேலேயும், எம்.ஏ.சி.டி., ஏற்றம் காண்பதற்கு வாய்பிருக்கும் அளவிலான சமநிலையையும் அடைந்துள்ளது. இது குறுகிய கால டெக்னிக்கல் ஏற்றத்திற்கு சாதகமா இருப்பதை காட்டுவதாக இருக்கிறது. நிப்டி 25,800-க்கு மேலே செல்லும்பட்சத்தில் 26,150 என்பது சாத்தியப்படும் சூழலே தற்போது தென்படுகின்றது. செய்திகள் சாதகமாக இருந்தால் இது நடந்துவிடக்கூடும். 25,800-ஐ கடக்க முடியாவிட்டால், அதற்கு கீழே குறுகிய எல்லைக்குள் பயணிக்க வாய்ப்புள்ளது.

ஆதரவு 25,600 25,490 25,400

தடுப்பு 25,800 25,875 25,950

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

ஐ.டி.சி., 325.40 7.45

எட்டர்னல் 281.35 -5.25

விப்ரோ 215.85 2.59

இன்போசிஸ் 1,391.30 25.70

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 926.45 0.65

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

எஸ் பேங்க் 21.10 0.14

சுஸ்லான் எனர்ஜி 45.90 -0.31

ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 99.80 -0.72

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 82.99 0.08

என்.எம்.டி.சி., 78.96 -1.50

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

ஐநாக்ஸ் விண்டு 99.90 -1.29

என்.பி.சி.சி., (இந்தியா) 98.52 -1.29

பந்தன் பேங்க் 168.13 0.20

கிராம்ப்டன் க்ரீவ்ஸ் 271.00 -1.66

இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் 126.30 1.33

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

பேங்க் ஆப் பரோடா 303.50 10.95

பேங்க் ஆப் இந்தியா 170.74 5.13

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 262.50 0.00

கனரா பேங்க் 149.25 3.41

வருண் பெவரேஜஸ் 455.80 -0.05

Image 1537360

Image 1537361

Image 1537362

Image 1537363

Source link