Aassan Maulaana About Rahul Gandhi,ராகுல் காந்தி -முக ஸ்டாலின் இணைந்து பரப்புரை செய்யாதது ஏன் ? காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானா விளக்கம் – congress candidate aassan moulana about rahul gandhi campaign

ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு வந்தடைந்தார்.இன்று மட்டும் மூன்று இடங்களில் ராகுல் காந்தி பரப்புரை செய்தார். ஆனால் ராகுல் காந்தியின் பரப்புரையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இதுதான் தற்போது பேசும்பொருளாக மாறியிருக்கின்றது என சொல்லவேண்டும். எதிர்க்கட்சிகள் பலரும் இதே கருத்தை குறிப்பிட்டு திமுக -காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்து வருகின்றனர்.

கூட்டணிக்குக்குள் ஒற்றுமை இல்லை என அ திமுக கூட்டணி யை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்கின்றனர். மறுபக்கம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ராகுல் காந்தி கூட்டணி கட்சி தலைவர் முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் மேடையில் நிற்கமாட்டேன் என்கின்றார். இனி காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு செலுத்தாதீர்கள் என மக்களை கேட்டுக்கொள்கிறார். மேலும் திமுக கூட்டணி இல்லை என்றால் காங்கிரஸ் கட்சிக்கு 0 .5 % தான் வாக்கு கிடைக்கும் எனவும் விமர்சனம் செய்தார் சீமான்.

ராகுல் காந்தி -ஸ்டாலின் பரப்புரை சர்ச்சை

இவ்வாறு முக ஸ்டாலின் மற்றும்ராகுல் காந்தி இணைந்து பரப்புரை செய்யாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் இதுகுறித்து வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானா விளக்கம் கொடுத்துள்ளார். ராகுல் காந்தி பரப்புரை குறித்து பேசிய அவர், தலைவர் ராகுல் காந்தி உண்மையை உரக்க சொல்லியிருக்கின்றார். தமிழ்நாடு யாருக்கும் அடிபணியாது என ராகுல் காந்தி கூறியிருக்கின்றார். முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியை தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்றார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தி பரப்புரை

வரும் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார் ராகுல் காந்தி. பாஜக தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றது எனவும் குறிப்பிட்டு பேசினார் ராகுல் காந்தி என அவரின் பேச்சு குறித்து தெரிவித்தார் அனஸ் மௌலானா. இதைத்தொடர்ந்து முக ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இணைந்து பரப்புரை செய்யாதது ஏன் என்ற கேள்விக்கும் விளக்கம் கொடுத்தார் அசன் மௌலானா.

அசன் மௌலானா விளக்கம்

இதுகுறித்து அவர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்அவர்கள் பரப்புரை குறித்து ஏற்கனவே அட்டவணை போட்டுவிட்டார். ஆனால் ராகுல் காந்தி அவர்களின் அட்டவணை சமீபத்தில் தான் போடப்பட்டது. இருவரின் பரப்புரை பிளானும் வெவ்வேறாக உள்ளது. முதல்வருக்கு ஏகப்பட்ட அப்பாயிண்ட்மெண்ட் இருக்கும். அதையெல்லாம் அவர் முடித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே அவரவர் அட்டவணையின் படி பரப்புரை செய்து வருகின்றனர்.

ஒருமித்த கருத்து

ஒட்டுமொத்தமாக முதலமைச்சர் எங்கு பேசினாலும், தலைவர் ராகுல் காந்தி எங்கு பேசினாலும் இருவரின் கருத்தும் ஒருமித்த கருத்தாக தான் இருக்கும். இன்று ராகுல் காந்தி பரப்புரை செய்யும்போது திமுக, தேமுதிக, விசிக என அனைத்து வேட்பாளர்களும் இருந்தனர். ராகுல் காந்தியின் சுற்றுப்பயணத்தில் முதலமைச்சர் பங்கேற்றால் சந்தோஷம் தான். ஆனால் முதல்வருக்கு ஏகப்பட்ட அப்பாயிண்ட்மெண்ட் இருக்கின்றது. அதனை அவர் முடித்தாக வேண்டும்.

அதைப்போல தான் உதயநிதி ஸ்டாலினுக்கும், ராகுல் காந்திக்கும் வெவ்வேறு அப்பாயிண்ட்மென்டில் பிசியாக இருக்கின்றனர்.எனவே அவர்கள் தனி தனியே வெவ்வேறு இடங்களில் பரப்புரை செய்தால் திமுக கூட்டணிக்கு மேலும் பலமாக அமையும். மேலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் முக ஸ்டாலின் ஆகியோர் ஒன்றிணைந்து பரப்புரை செய்யவில்லை என குறிப்பிட்டு விமர்சனம் செய்கின்றனர். இதைப்பற்றி அசனிடம் கேட்கையில், நாங்கள் என்ன பாஜக கூட்டணியா ? திமுக -காங்கிரஸ் கூட்டணி.

பிரதமர் மோடி வரும்போது எடப்பாடி பழனிச்சாமி அங்கு இல்லை என்றால் ED ரைட் அனுப்பிவிடுவார்கள்.. காங்கிரஸ் அப்படியெல்லாம் மிரட்டுகின்ற கட்சியா ? என்ன ? என பதிலளித்தார் அசன் மௌலானா. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானா கூறும்போது, முக ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இருவரும் வெவ்வேறு ப்ரோக்ராமில் பிசியாக இருப்பதால் தான் ஒன்று சேர்ந்து பரப்புரை செய்யவில்லை என்கின்றார்.

ஆனால் இன்னும் சில தினங்கள் தான் பரப்புரை செய்ய அனுமதி உள்ளது. எனவே ராகுல் காந்தி மற்றும் முக ஸ்டாலின் இணைந்து பரப்புரை செய்ய வாய்ப்பிருக்கா என கேட்டதற்கு அசன் பதிலளிக்கவில்லை. கடந்த தேர்தலில் இருவரும் சேர்ந்து பரப்புரை செய்த நிலையில் இம்முறை அது நடக்காமல் இருப்பது ஏன் ? என்ற கேள்வி தான் எழுந்து வருகின்றது.ஆனால் என்னதான் இவர்கள் இணைந்து பரப்புரை செய்யாமல் இருப்பது சர்ச்சையை எழுப்பினாலும் இவர்களின் கூட்டணி வலுவாக தான் இருப்பதாக கணிப்புகள் வருகின்றன. குறிப்பாக இன்றைய ராகுல் காந்தியின் பரப்புரை கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link