இந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் 2 வருமா? என்ற கேள்விக்கு நடிகை ஆண்ட்ரியா சொன்ன பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியாவிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, “அந்த படம் உருவானாலும் நான் அதில் நடிக்க மாட்டேன்,” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “இயக்குநர் `செல்வராகவன்’ உடன் பணியாற்றுவது மிகவும் கடினம், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக மட்டும் 200 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் பட்ததிற்கு பிறகு எனக்கு வந்த மற்ற படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் எனக்கு எளிமையாக இருந்தது,” என்று தெரிவித்தார்.
