August 2026 Monthly Horoscope,ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மகிழ்ச்சியும், முன்னேற்றமும் பெற வாய்ப்புள்ள 5 ராசிகள் – august 2026 horoscope: five zodiac signs that may experience positive growth and success

ஆகஸ்ட் மாதத்தில் நடக்க இருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகள் பல்வேறு சுப யோகங்களை உருவாக்க கூடியதாக இருக்கும். குறிப்பாக இந்த மாதத்தில் உருவாகக்கூடிய போதாது புதாதித்யா ராஜயோகம், கஜலட்சுமி ராஜயோகம் மங்களகரமான கிரக அமைப்புகள் குறிப்பிட்ட காட்சிகளுக்கு மிகவும் நன்மை தரக்கூடியதாக இருக்கும். இதனால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் நேரம் சிறப்பான தாக்கத்தை பிறகு உள்ள ராசிகளை இந்த பகுதியில் தெரிந்து கொள்வோம்.

ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்
ஆகஸ்ட் 1, 2026 : கன்னி ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஆகஸ்ட் 2: மிதுன ராசிக்கு செவ்வாய் மாறுகிறார். ஆகஸ்ட் 5: கடக ராசிக்கு புதன் பெயர்ச்சி நடக்கிறது. ஆகஸ்ட் 17: சிம்ம ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகும் ஆவணி மாதம் பிறக்கிறது. ஆகஸ்ட் 22: சிம்ம ராசிக்கு புதன் மாறுகிறார்.
இந்த கிரக பெயர்சிகளால் உருவாக்கும், கஜலட்சுமி யோகம், புதாதித்யா யோகம் உள்ளிட்டவை சில ராசிகளுக்கும் மங்களகரமான பலனைத் தரும்.

மேஷம் ஆகஸ்ட் மாத ராசி பலன்

மேஷ ராசிக்கு பிறந்தவர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் நன்மைகளை தரக்கூடியதாகவும், புதிய தொடக்கங்கள் மற்றும் சாதனைகளை படைக்க வாய்ப்புகளை தரும். உங்களுடைய சாதகமான கிரக அமைப்பு ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் ஈர்க்கப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பாக இந்த காலம் சாதகமானதாகவும் புதிய ஒப்பந்தங்களை பெறக்கூடியதாகவும் இருக்கும்.
​தொழிலை விரிவு படுத்துவதற்கான நல்ல சூழல் உருவாகும். நிதி நன்மை பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படியே வருமானம் கண்டறிவீர்கள். குடும்பத்தில் இணக்கமான சூழல் உருவாகும். உங்களுடைய வீடு வாகனம் வாங்கும் கனவுகள் நினைவாகலாம். திருமண வாழ்க்கையை துணையிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படக்கூடிய மாதம்.

கடகம் ஆகஸ்ட் மாத ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் நம்பிக்கையும், வெற்றியும் கிடைக்க கூடியதாக இருக்கும். குறிப்பாக உங்களுடைய ராசியில் உருவாகும்.
புதாதித்ய ராஜ யோகத்தின் தாக்கம் உங்களுடைய முடிவு எடுக்கும் திறனை வளப்படுத்தும். நீண்ட நாட்களாக வேலையை மாற்ற இயல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அல்லது தொழில் தொடங்குவதற்கான ஊழல் உருவாகும். மாணவர் மாணவர்களின் படிப்பில் சிறப்பாகவும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு. தொழிலாளர்களுக்கு நல்ல ஒப்பந்தங்களும், புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
நிதி நிலை தொடர்பாக முன்னேற்றம் இருக்கும். அதிசயம் உங்களுடைய செலவுகளை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம். இந்த மாதத்தில் உங்களுடைய குடும்ப சூழ்நிலை இனிமையானதாக மாறும். வீட்டில் மகிழ்ச்சியான சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். உங்களுடைய பெற்றோர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சியாக நேரம் செலவிடும் வாய்ப்பு உருவாகும்.

சிம்மம் ஆகஸ்ட் மாத ராசி பலன்

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த மாதத்தில் ராசி அதிபதியான சூரியன் உங்களுடைய ராசியில் நுழைவதால் தன்னம்பிக்கையின் தலைமைத்துவமும் அதிகரிக்கும். இதனால் உங்களுடைய வேலை அல்லது தொழில் தொடங்க தீர்க்கமாக செயல்படுவீர்கள். நிலைமையில் உள்ள பணிகளை முடிக்க சிறப்பாக செயல்படுவீர்கள். புதிய வேலையை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். மேலும் சிலருக்கு புதிய பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். உங்களுடைய ஆலோசனை பணியிடத்தில் மதிக்கப்படும்.
வணிகம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். புதிய முதலீடுகள் லாபத்தை தருவதாக அமையும். நிபுணர்களின் ஆலோசனை பெற்று செய்யக்கூடிய முதலீடுகள் வருங்காலத்தில் லாபத்தை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும். வேலைப்பளு காரணமாக சோர்வாக உணர்வீர்கள். உடல்நிலை கவனம் செலுத்தவும்.

கன்னி ஆகஸ்ட் மாத ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் தொழில் மற்றும் நிதிநிலை ரீதியாக முன்னேற்றத்தை காண பல வாய்ப்புகள் உருவாகும். புதாதித்ய ராஜ யோகம் மற்றும் கஜலட்சுமி யோகத்தின் தாக்கமானது உங்களுக்கு கடின உழைப்பை வெற்றியாக மாற்ற உதவும். புதிய பொறுப்புகள் உங்கள் வலிமையை நிரூபிக்க உதவும். இந்த காலகட்டத்தில் தொழிலதிபர்களுக்கு லாபகரமானதாக அமையும். புதிய கூட்டணி அல்லது முதலீடுகள் எதிர்காலத்தில் நீங்கள் வருவாயை மேம்படுத்தும்.
கடந்த காலத்தை விட இந்த மாதத்தில் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாகவும் நிதிநிலை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் சாதகமான நாள். படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றி அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும், மன அழுத்தம் குறையும்.

விருச்சிக ஆகஸ்ட் மாத ராசி பலன்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கும். குறிப்பாக கஜலட்சுமி யோகம் மற்றும் கிரகங்களின் சுப தாக்கமானது உங்களுக்கு நிதி நிலை ரீதியாக வலுவை சேர்க்கும். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக முன்னேற்றத்தை காண்பீர்கள். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய தொழிலை தொடங்க அல்லது முதலீடு திட்டத்திற்கான விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
உங்களுடைய வருமான வாய்ப்புகள் அதிகரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். செல்வத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.கடந்த காலம் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாத நபர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். ஆரோக்கியம் மேம்படும்.

Source link