2026 ஆம் ஆண்டு நவராத்திரி பண்டிகை முடியக்கூடிய நிலையில் உருவாக்க கூடிய கிரகங்களின் ஒரு அற்புதமான சேர்க்கை பல்வேறு யோகங்களை உருவாக்கக் கூடியதாக அமைகிறது. குறிப்பாக துலாம் ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை மற்றும் அவற்றால் உருவாகக்கூடிய யோகங்கள் சில ராசியின் வாழ்க்கையில் நிதி முன்னேற்றம், தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பது என பல்வேறு நன்மைகளை தரக்கூடியதாக அமைய உள்ளது.
உருவாகும் ராஜயோகங்கள்
நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட பட்ட நிலையில், ஜோதிட ரீதியாக இந்த பண்டிகை முடியும் நேரத்தில் அற்புத கிரக சேர்க்கை அமைப்பு உருவாகியுள்ளது. துலாம் ராசியில் பெயர்ச்சியாகி உள்ள சூரியன், இங்கு ஏற்கனவே சஞ்சாரம் செய்து வரக்கூடிய புதன் மற்றும் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் சுக்கிரனுடன் இணைந்து திரிகிரக யோகம் உருவாகிறது. மேலும் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையாலும், சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை முறையே புதாதித்ய யோகம், சுக்ராதித்ய யோகம் உருவாகிறது. மேலும் புதன் – சுக்கிரனின் இணைவு லட்சுமி-நாராயண ராஜயோக அருளைப் பொழிய உள்ளது. இந்த யோகங்களின் தாக்கங்கள் சிலர் ராசிகளுக்கு சுப வாய்ப்புகளை தரும்.
மேஷ ராசி
மேஷ ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் உங்களுடைய கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் செய்யக்கூடியவர்கள் அதில் முன்னேற்றத்தை காண புதிய வாய்ப்புகள் அமையும். உங்களுடைய திட்டமிட்ட செயல்பாடுகள் நல்ல பலன்களை தரக்கூடும். அதே சமயம் அவசரப்பட்டு முடிவுகள் எடுப்பது, முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். உங்களுடைய சிந்தனை மிக்க செயல்பாடு முன்னேற்றத்தை தரக்கூடியதாக அமையும். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கக்கூடிய சட்ட சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு கிரகங்களின் சேர்க்கை சாதகமான பலன்களை தரும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். தொழில் செய்யக்கூடியவர்கள் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வருமானம் அதிகரிப்பதற்கான நல்ல வழிகளை நீங்கள் எதிர்பார்க்க முடியும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிக்க முடியும் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், உங்கள் செயல்படுங்கள் லாபமும் ஏற்படும். நிதி விஷயங்களை திட்டமிட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை தரும்.
கடக ராசி
கடக ராசி அன்பர்களுக்கு, உருவாகியுள்ள மூன்று அற்புத யோகங்களால் உங்களுடைய தொழில் மற்றும் நிதிநிலை சாதகம் அடைய வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் நீங்கள் செய்யக்கூடிய கடின உழைப்பிற்கான அங்கீகாரம் பெறுவீர்கள். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு அல்லது தொழிலை விரிவுபடுத்துவதற்கான நல்ல சூழல் அமையும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த பணிகள் முடிக்க முடியும். புதிய நபர்களை சந்திப்பது, எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். மேலும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்படுவீர்கள்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்கு உங்கள் ராசி அதிபதி சூரியன் உருவாக்கக்கூடிய யோகங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படும். மேலும் குபேரன் அருளால் வீட்டில் நிதிநிலை முன்னேற்றம் அடையும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களை நீங்கள் பெற முடியும். நிதி விவகாரங்களில் சரியான திட்டமிடல் இருந்தால் உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். அதனால் தன்னம்பிக்கையுடன் எல்லா செயல்களையும் செய்வீர்கள்.
துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களுக்கு நீங்கள் செய்யும் தொழிலில் லாபத்திற்கான புதிய வழிகளை திறப்பீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கை, காதல் தொடர்பான விஷயங்களில் இணக்கமான சூழ்நிலை இருக்கும். உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடத்துவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடக்கும். மேலும் உங்கள் ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கை உங்கள் மனதில் தைரியத்தையும், தெளிவான மனதையும் தரக்கூடியதாக இருக்கும். அதனால் உங்கள் முன்னேற்றத்திற்காக கடின உழைப்பை மேற்கொள்ளவும்.
தனுசு ராசி
தனுசு ராசி நண்பர்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை முடிக்க முடியும். நீங்கள் செய்யும் வேலை அல்லது தொழிலில் சாதக சூழல் உருவாகும். நீங்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைய எடுக்கும் முயற்சிகள் அற்புதமான பலனைத் தரும். நிதி நிலைகள் உங்களுக்கு சாதகமாக அமைவதால் நீங்கள் தொட்ட காரியங்கள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக சிறந்து விளங்குவார்கள்.
