43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, இந்தோனேசியாவின் ஜொனாதன் கிறிஸ்டி உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி 23-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
