தேமுதிகவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த மீசை ராஜேந்திரன் திடீரென தேமுதிகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
மீசை ராஜேந்திரன் வெளியிட்டுள்ள கடிதத்தில், நான் கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டு காலமும் தாங்கள் இயக்கத்தில் 21 வருடமும் பல்வேறு பதவி வகித்து பயணம் பண்ணினேன். 3 முறை சட்டமன்றத் தேர்தலில் நின்றேன். தாங்கள் இயக்கத்திற்காக கடுமையாக உழைத்தேன். என் மேல் கட்சிக்காக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையெல்லாம் கேப்டன் என்கின்ற ஒற்றை சொல்லுக்காக நான் ஏற்றுக்கொண்டேன். நான் வகித்த செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து என்னை விடுவிக்கும்படியும் மற்றும் கட்சியிலிருந்தும் விடுவிக்கும்படியும் கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தேமுதிகளில் இருந்து விலகிய மீசை ராஜேந்திரன் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் இணைத்துக்கொண்டார். கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டும், கட்சியில் 21 ஆண்டும் உழைத்த அவர், தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.முன்னதாக விசுவாசத்திற்கு இடமில்லாததால் தேமுதிகவில் இருந்து விலகுவதாக மீசை ராஜேந்திரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
