கடந்த சில நாட்களாக தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட நிலையில், நாளை திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி நாளை மாலை 4 மணி முதல் 6 மணி வரை பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார் விஜய். திருப்பூரில் மாநகர் பகுதிகளில் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்காத நிலையில், புறநகர் பகுதிகளில் மட்டும் விஜய் நாளை பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார்.
மேலும் மாலை 6 மணி அளவில் அவிநாசி பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.
