#BREAKING: விஜய் வருகையால் ‘வெயிட்டிங்’ லிஸ்டில் உதயநிதி: பரப்புரை தள்ளிப்போன பின்னணி.!

உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தின் வடலூரில் நாளை பரப்புரையை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியிருக்கிறார். ஆனால் நாளை விஜய் வடலூர் உள்பட கடலூர் மாவட்டத்தின் 4 இடங்களில் பரப்புரையை மேற்கொள்ள இருப்பதால், உதயநிதி ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

முதலில் தவெக நிர்வாகிகள் அனுமதி கேட்டதால், உதயநிதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக நாளை மறுதினம் (ஏப்ரல் 12) உதயநிதி ஸ்டாலினை பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை கடலூரில் உள்ள வடலூரில் பரப்புரையை மேற்கொள்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

Source link