Career: எந்த டிகிரி படித்திருந்தாலும் 'ஓகே'! RBI சென்னை கிளையில் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்!

RBI வேலைவாய்ப்பு: அசிஸ்டென்ட் பணி; 650 காலிப்பணியிடங்கள் – யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

அசிஸ்டென்ட் பணி

மொத்த காலிப்பணியிடங்கள்: 650; சென்னை 53.

வயது வரம்பு: 20 – 28 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ஆரம்ப சம்பளம் ரூ.29,000; இப்போது இந்தப் பணிக்கு மாதாந்திர மொத்த ஊதியம் ரூ.58,514.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.

குறிப்பு: விண்ணப்பிப்பவர்களுக்கு அந்தந்த மாநில மொழி எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கி | RBI
இந்திய ரிசர்வ் வங்கி | RBI

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு, ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு, மொழித் திறன் தேர்வு.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோயில் அல்லது கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், புதுச்சேரி.

ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு: சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், மதுரை, சேலம், புதுச்சேரி.

தேர்வு தேதிகள்:

ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு: ஏப்ரல் 11, 2026

ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு: ஜூன் 7, 2026

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 8, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Source link