CM விஜய்யின் கர்நாடக பயணம்: ஜெயலலிதா காலத்து நடைமுறைதான் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் – minister sengottaiyan says jayalalithaa policy followed in vijay karnataka visit

காவிரி ஆற்றின் குறுக்கே மேகாதாது அணை கட்டுவதற்கான கர்நாடகா முயற்சிகளை மேற்க்கொண்டு வரும் நிலையில் நான் முதல்வர் இருக்கும் வரை, ஒரு செங்கலை கூட கட்ட விடமாட்டேன் என்பது தான் முதல்வர் விஜய் நிலைப்பாடாக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றத்திற்கு மேகதாதுவில் அணை விவகாரம் விஸ்வரூபத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் காவிரி நீர் பங்கீடு மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், கர்நாடக அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முடிவு செய்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை

குறிப்பாக ஜூன் 1 முதல் ஜூலை 22 வரையிலான காலத்தில் உச்சநீதிமன்ற அட்டவணைப்படி தமிழகத்திற்கு 31 டி.எம்.சி தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 3.5 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணையில் குடிநீர் பயன்பாட்டிற்கு தவிர்த்து, விவசாயத்திற்கு நீர் இல்லாத காரணத்தினால் தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?

இந்தச் சூழலில் முதல்வர் விஜய் நேரடி பேச்சுவார்த்தை முயற்சி மீண்டும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.மேலும் உச்சநீதிமன்றம் அமைத்த காவிரி மேலாண்மை ஆணையத்தை மீறி பேச்சுவார்த்தை நடத்துவது, தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பதிலாக, தமிழகத்திற்கு வர வேண்டிய 27.5 டி.எம்.சி நீரைப் பெற்றுத்தர மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

கர்நாடகா முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தும் விஜய்

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கைவிட வேண்டும் என்றும், இது சட்டப்பூர்வமாகத் தமிழகத்திற்குப் கிடைத்துள்ள உரிமைகளைப் பலவீனப்படுத்திவிடும் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் , அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந் த நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந் தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் சிவக்குமாரைச் சந்திப்பதற்கு முக்கியக் காரணங்கள் உள்ளன. வழக்கமாக அனைத்து முதலமைச்சர்களும் முதலில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பித்தான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும், அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு நேரில் சென்று முதலமைச்சர்களைச் சந்தித்துத் தண்ணீர் வழங்கக் கோரிக்கை வைத்தனர். அதற்குப் பிறகுதான் சூழலுக்கு ஏற்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது காலமக்காலமாக நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்.

மேக்கேதாட்டுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது

மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்துப் பேசிய அவர் முதலமைச்சர் நேரடியாக கர்நாடகா செல்வதால் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு 100 சதவீதம் எந்தப் பின்னடைவும் ஏற்படாது. நாம் தமிழகத்தை ஆளும் வரை மேக்கேதாட்டு அணையில் ஒரு செங்கலைக்கூட கர்நாடகா எடுத்து வைக்க முடியாது. அதுதான் நம் முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாடு என்று அழுத்தமாகக் கூறினார்.
தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் நிலவரம் குறித்த கேள்விக்கு ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, நிலத்தடி நீர் கிடைக்கும் இடங்களில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் (Borewells) அமைக்கப்பட்டு வருகின்றன. ஆற்றங்கரை ஓரத்தில் தற்போது 18 மணி நேரம் இயங்கி வரும் குடிநீர் மோட்டார்களை, இனி 22 மணி நேரம் இயக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நேரம் மோட்டார்கள் இயக்கப்படுவதால், தண்ணீர் தட்டுப்பாடு இன்றி சீராக விநியோகிக்கப்படும்.

Source link