CSK – அடுத்த மொயின் அலி இவர்தான்: இங்கிலாந்து வீரரை, டிரேடிங்கில் வாங்க சிஎஸ்கே தீவிரம் – chennai super kings target moeen ali like player from ipl 2027 trading

ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த மூன்று சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாத காரணத்தினால், 17ஆவது சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இதனால், அணிக்குள், சில தரமான வீரர்களை கொண்டுவர சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், டிரேடிங்கில் சில முக்கிய வீரர்களையும் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே நிர்வாகம் இருக்கிறது.

என்ன கட்டாயம்? சிஎஸ்கே நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவை வாங்க தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், பதிலுக்கு சிஎஸ்கேவிடம் இருந்து தரமான வீரர்களை வாங்க, மும்பை இந்தியன்ஸும் முயற்சித்து வருகிறது. ஹர்திக் பாண்டியா வேண்டுமென்றால், மாற்றாக ஷிவம் துபே, டிவோல்ட் பிரேவிஸ் ஆகியோர் வேண்டும் என சிஎஸ்கேவிடம், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேட்டுள்ளது. மேலும், 10 கோடி ரூபாய் கூடுதல் பணம் வேண்டும் எனவும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கே முடிவு என்ன? இந்நிலையில், இதுகுறித்து ஆலோசித்த சிஎஸ்கே நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, துபே மற்றும் பிரேவிஸ் ஆகியோரை கொடுக்க முன் வந்துள்ளனர். மேலும், 10 கோடியெல்லாம் கொடுக்க முடியாது என சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. மேலும், மும்பை இந்தியன்ஸிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவுடன், இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸையும் கேட்டுபெற சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மொயின் அலி இடம் காலி: சிஎஸ்கேவில் இருந்து மொயின் அலி சென்றப் பிறகு, அந்த இடம் காலியாகவே இருக்கிறது. மொயின் அலிக்கு மாற்றாக, ஒரு தரமான வெளிநாட்டு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது இந்த குறையை போக்க அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. மொயின் அலியைப் போலவே அபாரமாக ஆடக் கூடிய வில் ஜாக்ஸை மும்பை இந்தியன்ஸிடம் இருந்து வாங்கிவிட்டால், மிடில் வரிசையும் பலம்பெறும், சுழற்பந்து வீச்சு படையும் பலம் பெறும்.

இதனால், துபே மற்றும் பிரேவிஸ் ஆகியோரை விட்டுக்கொடுத்து, மும்பை இந்தியன்ஸில் இருந்து ஹர்திக் பாண்டியா, பிரேவிஸ் ஆகியோரை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

வில் ஜாக்ஸ், 2026 பெர்பாமன்ஸ்: கடந்த டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், வில் ஜாக்ஸ் 8 போட்டிகளில் விளையாடி, 176.56 ஸ்ட்ரைக் ரேட்டில், 56.50 சராசரியில் 226 ரன்களை குவித்து அசத்தினார். மேலும், சிறப்பாக பந்துவீசி 9 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

2026ஆம் ஆண்டில் மட்டும், சர்வதேச டி20 பார்மெட்டில், 259 ரன்களையும், 16 விக்கெட்களையும் எடுத்து, சிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருக்கிறார். வில் ஜாக்ஸுக்கு தற்போதுதான் 27 வயதாகிறது. இவரால், அடுத்த 5-6 வருடங்களுக்கு சிறப்பாக விளையாட முடியும் என்பதால்தான், சிஎஸ்கே இவரை டார்கெட் செய்ய முடிவு செய்துள்ளது.

ஒருவேளை, வில் ஜாக்ஸை கொடுக்க முடியாது என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்தால், பிரேவிஸை கொடுக்க முடியாது என சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸிலும், அதிக வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால், பிரேவிஸை வாங்கினால், வில் ஜாக்ஸை விட்டுக்கொடுக்கவே வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Source link