ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங், பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற எந்த சீசன்களை விடவும், பெரும்பாலான அணிகள், டிரேடிங்கில் குதித்துள்ளது. காரணம், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் போன்ற முக்கிய வீரர்கள், டிரேடிங்கில் பங்கேற்க உள்ளதால்தான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டிரேடிங்கில் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் போன்றவர்களை வாங்க ஆர்வமாக இருக்கிறது. அதேநேரத்தில், சிஎஸ்கேவிடம் இருந்து ஆயுஷ் மாத்ரேவை வாங்க அணிகள் கடும் போட்டி போட்டு வருகின்றன. குறிப்பாக, 5 அணிகள் ஆயுஷ் மாத்ரேவை வாங்க தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
என்ன காரணம்? ஆயுஷ் மாத்ரேவால் அடுத்த 10 வருடங்கள் வரை தொடர்ச்சியாக ஓபனராக இருக்க முடியும். அதேநேரத்தில், ஆயுஷ் மாத்ரே ஒரு கேப்டன்ஸி மெட்டிரியல் என்பதால், அவரை வாங்கினால், எதிர்காலத்தில் கேப்டனாகவும் பயன்படுத்த முடியும் என்ற நோக்கிலும், சிஎஸ்கேவிடம் ஆயுஷ் மாத்ரேவை கேட்டு வருகின்றனர்.
5 அணிகள் எது எது? மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவை கொடுத்துவிட்டு ஆயுஷ் மாத்ரேவை கேட்ட நிலையில், அதற்கு சிஎஸ்கே ஒப்புக்கொள்ளவே இல்லை.
சிஎஸ்கேவுக்கு, ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை இருப்பதால், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி, ஷாபஸ் அகமதுவை கொடுத்துவிட்டு ஆயுஷ் மாத்ரேவை வாங்கலாம் என முடிவு செய்தனர். ஆனால், அதற்கும் சிஎஸ்கே ஒப்புக்கொள்ளவில்லை.
டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், சிஎஸ்கேவை தொடர்புகொண்டு ஆயுஷ் மாத்ரேவை கேட்டனர். பதிலுக்கு டி நடராஜனை விட்டுக்கொடுக்க தயார் அல்லது அசுதோஷ் சர்மாவை கூட விட்டுக்கொடுக்க தயார் என ஆப்ஷன் கொடுத்தனர். ஆனால், இந்த டீலையும் சிஎஸ்கே நிர்வாகம் ஏற்கவில்லை.
குஜராத் டைடன்ஸ் அணி, வாஷிங்டன் சுந்தரை தர முன் வந்தபோதும், சிஎஸ்கே நிர்வாகம் இந்த டீலை ஏற்கவில்லை. வாஷிங்டன் சுந்தரை பணம் கொடுத்து வாங்கவே சிஎஸ்கே நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம், விக்கெட் கீப்பர் பேட்டர் சலீல் அரோராவை கொடுத்துவிட்டு, ஆயுஷ் மாத்ரேவை கேட்ட நிலையில், முடியவே முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்களாம்.
ஆயுஷ் மாத்ரேவை கேட்க என்ன காரணம்? இப்படி, பல அணிகள் ஆயுஷ் மாத்ரேவை கேட்க, முக்கிய காரணம் உர்வில் படேல்தான். ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக அவதிப்பட்டதால், உர்வில் படேலுக்கு டாப் ஆர்டரில் வாய்ப்பு கிடைத்தது. உர்வில் படேலும் தொடர்ச்சியாக காட்டடி அடித்து ரன்களை சேர்த்தார். இதனால், டாப் ஆர்டரில் தற்போது ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல் ஆகியோருக்கு இடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது.
குறிப்பாக, காட்டடி அடிக்கும் உர்வில் படேலை பிளேயிங் 11-ல் வைத்துக் கொண்டு, ஆயுஷ் மாத்ரேவை பெஞ்சில் அமர வைக்க வாய்ப்பு இருப்பதாக கருதிதான், ஆயுஷ் மாத்ரேவை பல அணிகள் கேட்டு வருகின்றன. இருப்பினும், ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேலை டிரேடிங்கில் அனுப்ப முடியாது என்ற முடிவில் சிஎஸ்கே நிர்வாகம் இருக்கிறது. டிவோல்ட் பிரேவிஸை கூட, தவிர்க்க முடியாத நேரத்தில்தான் டிரேடிங்கில் அனுப்ப சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
