CSK – உர்வில் படேல் டிரேடிங்கால், சிஎஸ்கேவுக்கு வரப் போகும் 3 இளம் வீரர்கள்: தரமான முடிவு – chennai super kings chance to get 3 young players after trade urvil patel

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் இருப்பதால், அடுத்த சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இதனால், அணியில் பெரிய அளவில் சீர்திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளனர். இதில் ஒரு பகுதியாக, தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை விடுவித்துள்ளனர். மேலும், ஆக்ரோஷமான அணியை கட்டமைக்கும் வல்லமையுடையவருக்கு, தலைமை பயிற்சியாளர் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளார்கள்.

அதுமட்டுமல்ல, டிரேடிங்கிலும் அபாரமாக செயல்படவும் முடிவு செய்துள்ளனர். இருப்பினும், இளம் வீரர்களை வெளியேற்றாமல், டிரேடிங்கில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டது.

உர்வில் படேல் டிரேடிங் : இந்நிலையில், உர்வில் படேல் டிரேடிங்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காரணம், உர்வில் படேலை விட்டுக்கொடுப்பதால், சிஎஸ்கேவுக்கு 3 இளம் வீரர்கள் கிடைக்க உள்ளார்களாம்.

அது எப்படி? குஜராத் டைடன்ஸ் அணியிடம் சாய் கிஷோரை கேட்டபோது, மாற்றாக உர்வில் படேலை விட்டுக்கொடுக்க வேண்டும் என குஜராத் அணி நிர்வாகம் நிபந்தனை விதித்தது. இதனை சிஎஸ்கே நிர்வாகம் ஏற்காத நிலையில், தற்போது சாய் கிஷோருக்கு பதிலாக உர்வில் படேலை விட்டுக்கொடுத்தால், வாஷிங்டன் சுந்தரையும் பணம் பெற்று விட்டுக்கொடுக்க குஜராத் டைடன்ஸ் முடிவு செய்துள்ளது.

இப்படி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் வந்தால், நூர் அகமதுவின் சேவை, தேவைப்படாது. இதனால், நூர் அகமதுவை டிரேடிங் செய்ய முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு, ஒரு தரமான ஸ்பின்னர் தேவைப்படும் நிலையில், நூர் அகமதுவை அங்கு கொடுத்துவிட்டு, அசுதோஷ் சர்மாவை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இப்படி, உர்வில் படேலின் டிரேடிங் காரணமாக, சிஎஸ்கேவின் பலவீனம் சரி செய்யப்பட உள்ளது. ஜடேஜா போனப் பிறகு அணிக்கு, சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் குறை இருந்தது. அதனை தற்போது போக்க முடியும். மேலும், தோனிக்கு அடுத்து ஒரு பினிஷர் வீரர் இல்லாத நிலைமை இருந்தது. இந்நிலையில், அசுதோஷ் சர்மாவை வாங்கிவிட்டால், அந்த குறையும் தீர்க்கப்படும்.

இப்படி, உர்வில் படேலை டிரேடிங் செய்வதால், அணிக்கு 3 நன்மைகள் நடக்க உள்ளதால்தான், உர்வில் படேலை டிரேடிங் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

புது தலைமை பயிற்சியாளர்: இந்நிலையில், புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியிலும், சிஎஸ்கே நிர்வாகம் வேகம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அணியை, ஆக்ரோஷமான அணியாகவும், அதிரடியான அணியாகவும் கட்டமைக்கும் வல்லமை உடையவரை, புது தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்ய சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தோனி ஓய்வு எப்போது? மகேந்திரசிங் தோனிக்கு, 45 வயதாவதால், ஐபிஎல் 2027 சீசனின் ஏலத்திற்கு முன், தோனி ஓய்வு அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாம். மேலும், தோனிக்காக தனியாக ஒரு நாளில், சென்னை சேப்பாக்கத்தில் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியை நடத்தி, தோனிக்கு பேர்வெல் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link