CSK: "எங்கள் அணியின் மீது எழும் விமர்சனங்கள் நியாயமானதுதான்.!"- ஃபிளெமிங் என்ன சொல்கிறார்?

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான தொடக்கத்தைச் சந்தித்திருக்கிறது.

விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்திருக்கிறது.

ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் 0 புள்ளிகளுடன் சென்னை அணி கடைசி இடமான 10வது இடத்தில் உள்ளது.

csk

இந்நிலையில் சிஎஸ்கே மீது எழும் விமர்சனங்கள் குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் பேசியிருக்கிறார்.

“நாங்கள் சரியாக விளையாடதப்போது எழும் விமர்சனங்கள் நியாயமானது தான். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நான் ஆண்டு முழுவதும் பல லீக் தொடர்களில் பயிற்சியாளராகச் செயல்படுவதால், கிரிக்கெட் இப்போது எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

எனவே, எந்த பயிற்சியும் இல்லாமல் நான் ஐபிஎல் தொடருக்கு வரவில்லை.

மற்ற அணியில் உள்ள வீரர்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஓர் அணியாக செட் ஆகிவிட்டார்கள்.

ஆனால் எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் புதிதாக இணைந்துள்ளனர்.

அவர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரே அணியாக களமிறங்கி ஜெயிப்பதற்கு கொஞ்சம் காலம் எடுக்கிறது.

ஸ்டீபன் பிளெமிங்
ஸ்டீபன் பிளெமிங்

சென்னை மைதானத்தின் பழைய சூழல் பல ஆண்டுகளாக எங்களுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் இப்போது பிட்ச் தன்மைகள் மாறிவிட்டன.

ஆடுகளங்கள் இப்போது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், அதற்கு ஏற்றவாறு எங்கள் திட்டங்களையும் வீரர்களின் தேர்வையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தற்போதைய பின்னடைவுகளில் இருந்து மீண்டு வர நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இன்று தனது 4வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்ளும் சிஎஸ்கே தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்று ரசிகர் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.

Source link