CSK – சிஎஸ்கே வரும் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர்? மாற்றாக வெளியேறுவது யார் யார்? – csk chance to get sai sudharsan and washington sundar via ipl 2027 trading

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், டிரேடிங்கில் தமிழக வீரர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. தமிழக வீரர்கள், சேப்பாக்கத்தில் விளையாடி பழக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களை வாங்கினால், மீண்டும் ஹோம் கிரௌண்டில் ஆதிக்கத்தை நிலை நாட்டலாம் என்பதால்தான், சிஎஸ்கே நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

சாய் கிஷோர் பேச்சு வார்த்தை: இதனால், முதலில் குஜராத் டைடன்ஸ் அணியிடம் இருந்து சாய் கிஷோரை வாங்கதான், சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்தது. சாய் கிஷோரை வாங்கி, சர்பரஸ் கானை வழங்க சிஎஸ்கே முன் வந்தது. காரணம், குஜராத் டைடன்ஸ் அணியின் மிடில் வரிசை பலம் இல்லாமல் இருப்பதால், மிடில் வரிசையில் நிலைத்து நின்று ஆடும் சர்பரஸ் கானை கொடுத்தால், குஜராத் ஏற்றுக்கொள்ளும் என சிஎஸ்கே கருதியது.

ஆனால், குஜராத் டைடன்ஸ் இந்த பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. டிவோல்ட் பிரேவிஸை மாற்றாக அனுப்ப வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அதுமட்டுமல்ல, டிவோல்ட் பிரேவிஸை அனுப்பினால், அடுத்து வாஷிங்டன் சுந்தரை கொடுத்துவிட்டு, சர்பரஸ் கானை வாங்க தயார். அல்லது, வாஷிங்டன் சுந்தரை பணம் வாங்கிக் கொண்டு அனுப்பவும் தயார் என குஜராத் டைடன்ஸ் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி, ஒரே நேரத்தில் இரண்டு தமிழக வீரர்கள் கிடைப்பதால், சிஎஸ்கே நிர்வாகம், இந்த டிரேடிங் டீலில் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சாய் கிஷோர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரையும் வாங்கினால், நூர் அகமது சிஎஸ்கேவுக்கு தேவைப்பட மாட்டார். இதனால், ஒரு வெளிநாட்டு வீரர் இடம் மிச்சமாகவும். ஏலத்தில் ஒரு தரமான வெளிநாட்டு பாஸ்ட் பௌலர் அல்லது பேட்டர் அல்லது ஆல்ரவுண்டரை வாங்கி, பிளேயிங் 11-ல் சேர்க்க முடியும். இதனால், குஜராத் டைடன்ஸுடன், டிரேடிங் டீலை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குஜராத் டைடன்ஸுக்கு பாதிப்பிலை: குஜராத் டைடன்ஸ் அணி நிர்வாகம், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் கிஷோர் ஆகியோரை வெளியேற்றுவதால், அந்த அணிக்கு எந்த பாதிப்பும் வராது. காரணம், அணியில் ஏற்கனவே இரண்டு இளம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் மனவ் சுதர் மற்றும் நிஷாந்த் சிந்து ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களை வளர்த்துவிட குஜராத் டைடன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால்தான், சுந்தர் மற்றும் கிஷோர் ஆகியோரை வெளியேற்ற முடிவு செய்துள்ளனர்.

ஐபிஎல் 2026 சீசனில், வாஷிங்டன் சுந்தர், 17 போட்டிகளில் விளையாடி, 150.20 ஸ்ட்ரைக் ரேட்டில், 37.70 சராசரியில் 377 ரன்களை அடித்தார். இதில், மூன்று அரை சதங்களும் அடங்கும். இருப்பினும், பந்துவீச போதிய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. மேலும், சாய் கிஷோரும் திறமையான ஆல்ரவுண்டர்தான். ஆனால், கடந்த சீசனில் மூன்று போட்டிகளில்தான் வாய்ப்பு கிடைத்தது.

இந்த இரண்டு வீரர்களும் சிஎஸ்கே வந்தால், தொடர்ச்சியாக பேட்டிங், பந்துவீச்சு வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், சேப்பாக்கத்தில் விளையாடி பழக்கப்பட்டவர்கள் என்பதால், தொடர்ச்சியாக பெரிய பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும், இது சிஎஸ்கேவுக்கும் நல்ல விஷயம்தான். இதனால், இந்த டிரேடிங் டீல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link