சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், டிரேடிங்கில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவை வாங்கி அணியை பலப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
ஹர்திக் பாண்டியாவை வாங்க, சிஎஸ்கே நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியபோது, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஷிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரும் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. ஆனால், சிஎஸ்கே இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. எக்காரணம் கொண்டும், ஆயுஷ் மாத்ரேவை மாற்றாக அனுப்ப முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஆயுஷ் மாத்ரேதான் வேண்டும் என அடம்பிடித்த நிலையில், அதன்பிறகு சற்று கீழே இறங்கி வந்து, டிவோல்ட் பிரேவிஸ், துபே இருவரையும் கொடுங்கள் எனக் கேட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து ஆலோசித்த சிஎஸ்கே நிர்வாகம், தற்போது தி ஹென்ட்ரட் தொடரில் விளையாடி வரும் டிவோல்ட் பிரேவிஸின் செயல்பாட்டை வைத்து, அவரை டிரேடிங்கில் அனுப்புவது குறித்து முடிவு செய்வோம் என்ற நிலைபாட்டிற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸை தொடர்புகொண்ட சிஎஸ்கே நிர்வாகம், சிறிது காலம் பொறுங்கள். அதற்குள் அவசரப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
படுமோசமாக சொதப்பிய பிரேவிஸ்: இந்நிலையில், தி ஹென்ட்ரட் தொடரின் முதல் போட்டியில், டிவோல்ட் பிரேவிஸ் படுமோசமாக சொதப்பியுள்ளார். மான்செஸ்டர் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 100 பந்தில் 138/9 ரன்களை அடித்த நிலையில், இலக்கை துரத்திக் களமிறங்கிய லண்டன் ஸ்பிரிட்ஸ் அணியில், கேப்டன் லியாம் லிவிங்ஸ்டன் 40 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 69 ரன்களை குவித்து, வெற்றி வாய்ப்பை பிரகாசமாக வைத்திருந்தார்.
ஆனால், 5ஆவது இடத்தில் ஆடிய டிவோல்ட் பிரேவிஸ் 23 பந்தில் 2 பவுண்டரிகள் உட்பட 22 ரன்களை மட்டும் அடித்து சொதப்பினார். இவர் சொதப்பியதால்தான், லண்டன் அணி தோல்வியை சந்தித்தது. அதாவது, பிரேவிஸ் 23 பந்தில் 22 ரன்களை மட்டுமே அடித்த நிலையில், லண்டன் ஸ்பிரிட் அணி, 100 பந்துகளில் 131/6 ரன்களை மட்டும் அடித்து, 7 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
இப்படி, பிரேவிஸ் சொதப்பியது மட்டுமல்ல, அணியின் தோல்விக்கே முக்கிய காரணமாக மாறிவிட்டார். சமீப காலமாகவே, பிரேவிஸால் தொடர்ச்சியாக அதிரடி காட்ட முடியவில்லை. தற்போது, தி ஹென்ட்ரட் தொடரின் முதல் போட்டியிலேயே, சொதப்பியுள்ளார். இன்னமும் 2-3 போட்டிகளில் பிரேவிஸ் சொதப்பினால், அவரை மும்பை இந்தியன்ஸுக்கு கொடுத்துவிட்டு, மாற்றாக ஹர்திக் பாண்டியாவை வாங்குவது உறுதியாகிவிடும் எனக் கருதப்படுகிறது.
மேலும், குஜராத் டைடன்ஸ் அணியிடம் இருந்து வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் போன்றவர்களையும் வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. சாய் கிஷோருக்கு பதிலாக உர்வில் படேலை கொடுத்தால், வாஷிங்டன் சுந்தரை பணம் பெற்றுக் கொண்டு அனுப்ப குஜராத் டைடன்ஸ் முடிவு செய்துள்ளது.
இந்த டிரேடிங் டீல்கள் வெற்றிகரமாக முடிந்தாலே, சிஎஸ்கேவின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இதனால், இந்த மூன்று டீல்களையும் விரைந்து முடிவுக்கு கொண்டுவர சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், நூர் அகமதுவை டெல்லி கேபிடல்ஸுக்கு கொடுத்து, அசுதோஷ் சர்மாவையும் வாங்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
