CSK – ருதுராஜ் கெய்க்வாட்டை கொடுத்தால், இந்த தரமான வீரரை தர தயார்: சிஎஸ்கேவிடம் பேசிய ஐபிஎல் அணி? – ipl team approached csk for trade ruturaj gaikwad

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், கடந்த மூன்று வருடங்களாக பட்ட மரண அடி காரணமாக, ஐபிஎல் 2027 சீசனுக்கு முன், அணியை பலப்படுத்தும் வேலையை துவங்கியுள்ளனர். குறிப்பாக, டிரேடிங்கில், தரமான வீரர்களை வாங்கி, அணியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அதில் ஒரு பகுதியாக, டிரேடிங்கில் வெளியேற விரும்பும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கில், சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமோ, ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, சிஎஸ்கேவிடம் இருந்து தரமான வீரரை எதிர்பார்க்கிறது.

குறிப்பாக, ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே ஆகியோரை டார்கெட் செய்து கேட்கிறார்கள். காரணம், இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள். இருவராலும், வான்கடே மைதானத்தில் அபாரமாக செயல்பட முடியும் என்பதால்தான், இவரையும் கேட்டனர். ஆனால், இந்த இருவரையும் விடுவிக்க முடியாது என சிஎஸ்கே நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவும், தான் சிஎஸ்கேவுக்கு செல்ல விரும்புகிறேன் என மும்பை இந்தியன்ஸிடம் தெரிவித்துள்ளாராம்.

இதனால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும், வேறு வழியில்லாமல், சிஎஸ்கேவிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், ‘‘நாம், கேப்டன்களை மாற்றிக் கொள்வோம். ஹர்திக்கை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ருதுராஜ் கெய்க்வாட்டை எங்களுக்கு கொடுங்கள்’’ என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

மேலும், இதற்கு சம்மதம் தெரிவித்தால், உடனே டிரேடிங் பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக முடித்துவிடலாம் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், எக்காரணம் கொண்டும் ஹர்திக் பாண்டியாவை, பணம் பெற்றுக் கொண்டு எந்த அணிக்கும் அனுப்ப முடியாது. ஹர்திக்கை அனுப்பினால், மாற்றாக ஒரு தரமான வீரரை வாங்கிக் கொண்டுதான் அனுப்புவோம் என அப்போது, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாம்.

சிஎஸ்கே நிராகரிப்பு: இந்நிலையில், மும்பை இந்தியன்ஸின் கோரிக்கையை சிஎஸ்கே நிர்வாகம், நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட்டை, நீண்ட கால, கேப்டன்ஸி ஆப்ஷனாக பார்க்கிறோம். மேலும், ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே ஆகியோரும் எங்களுக்கு முக்கியம் என சிஎஸ்கே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாம்.

என்ன காரணம்? ஹர்திக் பாண்டியாவுக்கு தற்போது 32 வயதாகிறது. மேலும், அடிக்கடி காயம் காரணமாக அவதிப்படுகிறார். இதனால், அவரை வாங்குவதற்காக, இளம் வீரர்களை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் சிஎஸ்கே நிர்வாகிகள் சிலர் உறுதியாக இருக்கிறார்கள். இதனால்தான், ஹர்திக் பாண்டியா பேச்சு வார்த்தை இழுபறியில் இருக்கிறது.

இளம் பேட்டர்கள் வேண்டும்: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு அதிக வயதாகிவிட்டதால், அவருக்கு மாற்றாக தரமான இந்திய இளம் வீரர்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இருக்கிறது. இதனால்தான், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, தரமான இந்திய இளம் பேட்டர்களை வாங்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Source link