CSK, RCB Trading – சிஎஸ்கேவிடம் 2 வீரர்களை கேட்ட ஆர்சிபி: மாற்றா யார் யாரை விடுவிக்க முடிவு தெரியுமா? – rcb want two players from csk via trading for ipl 2027

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த மூன்று சீசன்களாக தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி வரும் நிலையில், ஐபிஎல் 2027 சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுத்தாக வேண்டும் என்பதற்காக, டிரேடிங்கில் தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், ஐபிஎல் 2027 சீசனுக்கான ஏலத்திற்கு, தற்போது இருந்தே திட்டங்களை வகுத்துள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டிரேடிங் டீல் பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, 2 வீரர்களை கேட்டு, ஆர்சிபி பேச்சு வார்த்தையை நடத்தியது.

யார் யார்? கடந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அபாரமாக செயல்பட்ட, வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் வேண்டும் என ஆர்சிபி நிர்வாகம் கேட்டிருக்கிறது. மாற்றாக, ஜிதேஷ் சர்மா மற்றும் ரஷிக் சலம்தார் ஆகியோரை விட்டுக்கொடுக்க முன் வந்தனர்.

ஒருவேளை, ரஷிக் சலாம்தார் வேண்டாம் என்றால், டிம் டேவிட்டை கொடுக்கவும் தயார் என ஆர்சிபி அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள், சம்மதம் தெரிவிக்கவில்லை. எக்காரணம் கொண்டும், ஜேமி ஓவர்டனை விட்டுக்கொடுக்க முடியாது என ஆர்சிபி நிர்வாகத்திடம், சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், டிவோல்ட் பிரேவிஸை வாங்க ஜிதேஷ் சர்மா, யாஷ் தயாள் ஆகியோரை விட்டுக்கொடுக்க ஆர்சிபி முன் வந்தது. ஆனால், இதற்கும், சிஎஸ்கே நிர்வாகம், முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும், மீண்டும் சிஎஸ்கேவை தொடர்புகொண்ட ஆர்சிபி நிர்வாகம், டிவோல்ட் பிரேவிஸுக்காக எந்த வீரர், மாற்றாக வேண்டும் என சிஎஸ்கேவிடம் கேட்ட நிலையில், பிரேவிஸை விடுவிக்க வாய்ப்பில்லை என திட்டவட்ட தெரிவித்து, பேச்சு வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஜிதேஷ் சர்மாவை வேறு அணிக்கு கொடுத்துவிட்டு, மாற்றாக ஒரு வேகப்பந்து வீச்சு வீச்சு ஆல்ரவுண்டர் அல்லது மிடில் வரிசை பேட்டரை வாங்க, ஆர்சிபி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சிஎஸ்கே டிரேடிங் தீவிரம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், தற்போதைக்கு ஹர்திக் பாண்டியா, சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை டிரேடிங்கில் வாங்க, தீவிரமாக போராடி வருகிறது. குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவை, பணம் கொடுத்து வாங்கும் முயற்சியில் சிஎஸ்கே தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமோ, ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக இளம் வீரரை எதிர்பார்க்கிறது. இருப்பினும், ஹர்திக் பாண்டியாவுக்கு 32 வயதாகிவிட்டதாலும், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதாலும், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, இளம் வீரரை விட்டுக்கொடுக்க கூடாது என சிஎஸ்கே நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பேச்சு வார்த்தையில் கடும் இழுபறி நீடித்து வருகிறது.

அதேநேரத்தில், குஜராத் டைடன்ஸ் அணியிடம் இருந்து வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோரை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாற்றாக, உர்வில் படேலையும் விட்டுக்கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியிலும் சிஎஸ்கே விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.

Source link