Deva: கடந்த அக்டோபரில் தம்பி சபேஷ், இந்த அக்டோபரில் அண்ணன் தேவா: குடும்பத்தில் தொடர் சோகம்

தேவா, சபேஷ்: தேனிசைத் தென்றல் தேவா பெயரை சொன்னாலே அவரின் கானா பாடல்கள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். கானா பாடல்களை பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாக்கியவர் அவர். 76 வயதானாலும் ஆரோக்கியமாக இருந்து வந்தவர் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அக்டோபர் 17ம் தேதி இதை விட மோசமாக இருக்க முடியாது என்று பிரபலங்களும், ரசிகர்களும் கண்ணீர்விட்டார்கள். தேவா குடும்பத்தில் கடந்த அக்டோபர் மாதம் தான் பெரும் இழப்பு ஏற்பட்டது. அதாவது தேவாவின் தம்பி சபேஷ் 23-10-2025 அன்று காலமானார். 68 வயதான அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.என் தம்பி இழந்த உலகை விட்டு சென்றுவிட்டான் என்று கண்ணீருடன் அப்பொழுது தெரிவித்தார் தேவா.

சபேஷ் இறந்து ஓராண்டு முடிவதற்குள் தேவா இறந்தது அவரின் குடும்பத்தாரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தன் இனிமையான இசையால் மக்களை மகிழ்வித்த தேவாவுக்கு மாரடைப்பால் மரணம் என்பதை ஏற்க பலரும் மறுக்கிறார்கள்.

உயிரை வாங்கும் மாரடைப்பு: தேவாவின் மரணத்தால் மாரடைப்பால் திரையுலகிற்கு ஏற்படும் இழப்புகள் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. தன் தனித்துவமான நடிப்பால், திரைக்கதையால் மக்களை கவர்ந்த பாக்யராஜ் கடந்த ஜூன் மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

தற்போது தேவாவையும் மாரடைப்பு கொண்டு சென்றுவிட்டது. பாக்யராஜும் சரி, தேவாவும் சரி நன்றாக நடமாடிக் கொண்டிந்தார்கள். அப்படி இருக்கும்போது மாரடைப்பு ஏன் என்று சினிமா ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபலங்கள் அஞ்சலி: சென்னை தி. நகரில் இருக்கும் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் தேவாவின் உடலுக்கு அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தேவாவுடனேயே பயணித்த பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் கதறி அழுதுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டைட்டில் கார்டுக்கு மாஸ் இசையமைத்து கொடுத்தவர் தேவா. தன் நண்பரின் மரணம் குறித்து அறிந்ததும் முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த்.

தங்கச்சங்கிலி: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அண்ணாமலை படத்திற்கு தேவா தான் இசையமைத்தார். அவரின் இசையை கேட்டு மகிழ்ச்சி அடைந்த ரஜினியோ அண்ணாமலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவருக்கு தங்கச் சங்கிலி ஒன்றை பரிசாக கொடுத்தார்.

இந்நிலையில் தேவாவின் உடலில் அந்த தங்கச் சங்கிலி வைக்கப்பட்டிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் தனக்கு கொடுத்த பரிசை பொக்கிஷமாக வைத்திருந்தார் தேவா. அப்படி இருக்கும்போது உயிர் பிரிந்த பிறகும் அவர் உடலில் அந்த பொக்கிஷ பரிசு இருப்பது மேலும் உணர்ச்சிவசப் பட வைத்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தேவா மகிழ்ச்சி: ரஜினியின் ஜெயிலர் 2 படத்திற்கு கிடைத்திக்கும் வரவேற்பை பார்த்து தன் மகன் ஸ்ரீகாந்திடம் சொல்லி சந்தோஷப்பட்டார் தேவா என நியூஸ் 18 தெரிவித்திருக்கிறது. அவர் ரஜினியுடன் சேர்ந்து வேலை செய்து பல ஆண்டுகளாகிவிட்டாலும் நண்பர் மீதான அன்பு மாறவே இல்லை. அது மட்டும் அல்ல சக கலைஞர்களின் வெற்றியை பார்த்து தனக்கு கிடைத்த வெற்றி போன்று சந்தோஷப்படும் குணம் கொண்டவர் தேவா என்பது குறிப்பிடத்தக்கது.

Source link