Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை ஒரு மாதம் முன்பே உணரலாம் என்பது உண்மையா?

உண்மையில், பலருக்கு இந்த அறிகுறிகள் சில நாள்களுக்கு முன்னரோ, வாரங்களுக்கு முன்னரோ அல்லது ஒரு மாதத்திற்கு முன்பேகூட லேசாக உணரப்படலாம்.

ஹார்ட் அட்டாக் அறிகுறிகள்: ஒரு மாதம் முன்பே உணரமுடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 60 வயது. அவருக்குச் சமீபத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றினோம். அப்போது அவர், தனக்கு ஏற்பட்ட அறிகுறிகள் ஒரு மாதமாகவே தொடர்வதாகச் சொன்னார்.

திடீரென அதிகமான பிறகுதான் பயம் வந்து மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். அப்படி ஒரு மாதம் முன்பே அவர் உணர்ந்த அறிகுறிகள், ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள்தான் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் பொதுவாக உடனே உணரப்படும், அடுத்து அதிகமாகும், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்றுதானே சொல்வார்கள்… இப்படி ஒரு மாதம் முன்பேகூட அறிகுறிகளைக் காட்டுமா ஹார்ட் அட்டாக்… இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

 அருண் கல்யாணசுந்தரம்
அருண் கல்யாணசுந்தரம்

பல நேரங்களில் நமக்கு இதய நோயின் அறிகுறிகள் அல்லது மாரடைப்பின் (Heart Attack) அறிகுறிகள் என்று பார்த்தால், நெஞ்சுப்பகுதியில் ஒருவித அழுத்தம் மற்றும் இடது கையில் வலி என்றே பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இவை மிகவும் பொதுவான (Classic) அறிகுறிகள். 

உண்மையில், பலருக்கு இந்த அறிகுறிகள் சில நாள்களுக்கு முன்னரோ, வாரங்களுக்கு முன்னரோ அல்லது ஒரு மாதத்திற்கு முன்பேகூட லேசாக உணரப்படலாம். திடீரென மூச்சு வாங்குதல், நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, படபடப்பு (Palpitations) ஏற்படுவது, தலைச்சுற்றல், அதிகமாக வியர்ப்பது, குறைவான வேலை செய்யும்போதே மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது.

திடீரென மூச்சு வாங்குதல், நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, படபடப்பு (Palpitations) ஏற்படுவது, தலைச்சுற்றல், அதிகமாக வியர்ப்பது, குறைவான வேலை செய்யும்போதே மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது.
திடீரென மூச்சு வாங்குதல், நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, படபடப்பு (Palpitations) ஏற்படுவது, தலைச்சுற்றல், அதிகமாக வியர்ப்பது, குறைவான வேலை செய்யும்போதே மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது.
freepik

இந்த அறிகுறிகள் அனைத்தும் திடீரென ஒரு நாளில் ஏற்பட வேண்டும் என அர்த்தமல்ல. ஓர் எரிமலை வெடிப்பதற்கு முன், முதலில் புகை வந்து, பிறகு அது வெடித்து நெருப்புக் குழம்பை உமிழ்வதுபோல, ஹார்ட் அட்டாக் அறிகுறிகளும் படிப்படியாகக் குறைவான தீவிரத்துடன் (Warning signals) வெளிப்பட்டு, திடீரென ஒரு நாள் உச்சநிலையை அடையக்கூடும்.  

குறிப்பாக, பெண்கள் மற்றும் சர்க்கரைநோய் (Diabetes) உள்ளவர்களுக்கு இது போன்ற மாறுபட்ட (Atypical) அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இது போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link