Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி

நீங்கள் ஓர் உறவில் இருக்கிறீர்கள். ஆனால், ஒருவர் இன்னொருவருக்கு, மனதில் தோன்றியதை அப்படியே ஒரு குறுஞ்செய்தியாக, முன்னும் பின்னுமாக நகர்ந்து ஏதும் டெலீட், எடிட் செய்யாமல் அனுப்ப இயலவில்லை என்றால் அங்கே உறவுச் சிக்கல் இருக்கிறது என்றே அர்த்தம். அப்படித்தான், அடித்த மெசேஜை அனுப்பாமலும், அதில் திருத்தம் செய்து அனுப்பியும் பேட்ச் ஒர்க் பார்ப்பாள் எமிலி.

நிமிடத்துக்கு நிமிடம் வன்மும், பொறாமையும் ரேபீஸ் போல் மூளைக்குள் பரவ, எமிலியை எப்படி அந்தப் பதவியிலிருந்து காலி செய்வது என்று விரியும் லூக்கின் எண்ணங்கள். அவன் காதுபடவே அவனது சகாக்கள் “எமிலி பாஸுடன் அட்ஜெஸ்ட் செய்து பதவியை வாங்கியிருப்பாள்,” என்று பேசும்போது கூட அமைதி காக்கிறான். உண்மையில் உள்ளூர அவன் அதை ரசிப்பான்.

ஆனாலும், எமிலி அவனிடம் நயந்து பேசுவாள். நிலைமையை சரிசெய்ய முயற்சிப்பாள். நெருக்கமாக இருக்கலாம் என்று கேட்பாள். எதுவுமே அவனிடம் எடுபடாது.

மாறாக, “உன்னுடைய ஆடை சரியில்லை. ஆண்கள் கவனத்தை ஈர்க்கும்படி ஆடை அணிகிறாய்,” என்பான். அந்த நிமிடம் எமிலி எரிமலையாகி அவனுக்குக் குட்டி ஷாக் தருவாள். ஆனாலும் அது நீடிக்காது. அடுத்த நாள் தன் உடை அலங்காரத்தை மாற்றிக் கொள்வாள், ஒருவேளை லூக் அதில் சமாதானமடையலாம் என்ற ஆசையில்.

ஒருபுறம் லூக் வன்மத்தை வளர்க்க, மறுபுறம் “நான் என்ன செய்ய வேண்டும், நாங்கள் எப்படி பழைய மாதிரியே இருக்கலாம்” என்று தீர்வை நோக்கி தன்னை வதைப்பவளாவாள் எமிலி.

Source link